Type Here to Get Search Results !

அப்பாச்சி 160 சீரிஸ்.. புத்தம் புதிய கருப்பு நிற பதிவான "ஏ ப்ளேஸ் ஆஃப் பிளாக்" டார்க் எடிஷன் அறிமுகம்

கோவை மாவட்டம்  உலக அளவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னனி வகிக்கும் நிறுவனமான டி.விஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி 160 சீரிஸ் மோட்டார் சைக்கிள்களின் புத்தம் புதிய கருப்பு நிற பதிவான "ஏ ப்ளேஸ் ஆஃப் பிளாக்" டார்க் எடிஷன் இருசக்கர வாகனத்தை அறிமுகபடுத்தியுள்ளது.

 

இவ்வாகனத்திற்கு அப்பாச்சி ஆர்.டி.ஆர்.160 மற்றும் ஆர்.டி.ஆர்.160 4V என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியானது அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிக தலைவர் விமல் சும்ப்லி  கூறியதாவது  40 ஆண்டுகளுக்கு மேலாக பந்தய பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி வரிசை இருசக்கர வாகனங்கள் 5.5 மில்லியனுக்கும் அதிகமான இருசக்கர வாகன ஆர்வலர்களைக் கொண்டிருக்கும் உலகளாவிய ஒரு மாபெரும் சமூகமாக உருவாகியுள்ளது.

மேலும் உலக அளவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ப்ரீமியம் மோட்டார் சைக்கிள் ப்ராண்ட்களில் ஒன்றாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது 

இப்போது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 வரிசையானது கம்பீரமான தோற்றத்தின் உத்வேகத்துடன் பார்த்த நொடியில் கவனத்தை ஈர்க்கும் புத்தம்புதிய பிளாக் எடிஷனுடன் களமிறங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் யுபி.பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.